தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் ஊராட்சி கிராமத்தில் 150க்கு மேற்பட்ட கிராம மக்கள் குடியிருந்து வரும் குடியிருப்பு பகுதி கிராம மக்களுக்கே தெரியாமல் மோசடியாக PACL ltd நிதி நிறுவனம் பெயரில் மாற்றம். பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் புகார் மனு அளித்தனர்.
தனியார் நிதி நிறுவனமான PACL ltd நிறுவனத்தின் மீது பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்கடி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள இடங்கள் தலைமுறை தலைமுறையாக சமுதாய வழக்கப்படி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பெயரில் நிலம் உள்ளது. வீட்டு பட்டா மற்றும் தீர்வை அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பெயரிலேயே உள்ளது.
இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள யாரும் தங்களது சொத்தை PACL நிறுவனத்திற்கு எழுதிக் கொடுக்காத நிலையில் கிராம மக்கள் வில்லங்கச் சான்று போட்டு பார்த்த போது குடியிருப்புகள் அனைத்தும் pACL நிறுவனம் பேரில் வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஆண்கள் நூற்றுக்கணக்கானோர் போலியாக தாங்கள் யாருக்கும் எழுதிக் கொடுக்காத தங்களது நிலங்களை மோசடி நபர்கள் மூலம் PACL நிறுவனம் தனது பெயருக்கு மாற்றி ஆக்கிரமித்துள்ளது எனவே உடனடியாக தங்களது நிலங்களை தங்களது பெயரில் மாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தார்கள். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் தங்களது ஆதார் கார்டு ரேஷன் கார்டு ஆகியவற்றை ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
நாளளய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.