தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப் பையூரணியைச் சேர்ந்தவர் ராமசுந்தரம் (40). இவர் கோவில்பட்டி பகுதியில் உள்ள 4 கோயில் களில் அர்ச்சகராக உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு ஆம்னி வேனில் வந்த நபர்கள் மெத்தை, தலையணை, மின்விசிறி போன்றவற்றை ராமசுந்தரத்திடம் ரூ.5 ஆயிரத் துக்கு விற்பனை செய்துள்ளனர்.
பின்னர் குலுக்கல் முறை யில் பரிசு விழும் என்று கூறி, ராமசுந்தரத்தின் செல்போன் எண்ணை பெற்றுச் சென்றுள்ளனர். சில நாட்கள் கழித்து ராமசுந்தரத்திடம் பரிசு விழுந் துள்ளதாகவும், அதனை பெறுவதற்கு வருமான வரி மற்றும் முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறி அவ்வப்போது பணம் பெற்றுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுவரை ரூ.14 லட்சத்து 28 ஆயி ரத்து 860 கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பரிசை பெற்றுக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் ராமசுந்தரம் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தார்.
ஏடிஎஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துகுமார் (37), விருதுநகர் மாவட்டம் புல்லலங்கோட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் முனிரத்னம் (36), சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மருதுபாண்டியன் (38) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 2 லேப்டாப், ஒரு டேப், ஒரு ஹார்டு டிஸ்க், 5 டெபிட் கார்டுகள்,
ரூ.20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.