தூத்துக்குடி அருகே வக்கீல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி காவலர்களை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதி யில் காவல்துறை கைது செய்ய முயலும் போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப ஓட முயன்றதில்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி ஜெயக்குமார் காலில் காயம்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ராஜ பிரபு, மற்றும் காவலர் மாணிக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர்,
-முத்தரசு கோபி.