பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு வாபஸ் பெற்பட்டுள்ளதை வரவேற்று தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர்கள் வகுப்புப் புறகணிப்பு போன்ற போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து உயர்கல்விதுறை அறிவிப்பின்படி தேர்வு கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதனை வரவேற்று தூத்துக்குடி வஉசி கல்லூரி அருகில் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் மாணவர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர் மாதவன், பிரகாஷ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் வேல்சூர்யா,வெனிஸ்ட், ஆனந்த்,சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர்,
-முத்தரசு கோபி.