NALAIYA VARALARU
பறவைகளின் பசி தாகம் தீர்ப்போம்!தண்ணீர் தானிய தேக்கி வைப்பு!!
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் பறவைகளின் பசி- தாகம் தீர்ப்போம் என்ற திட்டத்தின் மூலம் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் சார்பில் பொள்ளாச்சி நகரம் முழுவதும் பறவைகளின் பசி தாகம் தீர்ப்போம் என்ற திட்டத்தின் மூலம் தண்ணீர் தானிய தேக்கி இன்று அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டது.
இதுபற்றி இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல் கூறுகையில் முதல் கட்டமாக 50 தண்ணீர் தானிய தேக்கிகள் வைக்கப்படுகிறது. அதன் பிறகு படிப்படியாக சுமார் 200 வரையிலான தண்ணீர் தானிய தேக்கிகளை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோடைகால வெயிலின் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீரின்றி வற்றியதன் காரணமாக பறவை இனங்களும் மற்றும் சின்ன சின்ன விலங்குகளும் நீரின்றி இறப்பை சந்திக்க நேரிடுகிறது. அதன் காரணமாக இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையானது இந்த திட்டத்தை மேற்கொள்ள இருக்கிறது.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் இத்திட்டம் துவங்கப்பட்டது. சார் ஆட்சியர் தண்ணீர் மற்றும் தானியங்கள் வைத்து அவரது அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
இதையடுத்து பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. மேலும் காவல் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் உதவி கண்காணிப்பாளர் முன்னிலையில் வைக்கப்பட்டது.
அதே போல் இயற்கை ஆர்வலர்கள் மட்டும் இதனைச் செய்தால் போதாது பொதுமக்களும் வீட்டின் சுற்றுச் சுவர்களில், மொட்டை மாடிகளில் ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வையுங்கள். பறவைகளின் பசி தாகம் தீர்ப்போம். பறவைகளை பாதுகாப்போம் என்று கூறினார்.
நிகழ்வில் அறக்கட்டளையின் அறங்காவலர் முருகானந்தம், மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் ம.கமலக்கண்ணன், பழங்குடியின அமைப்பாளர்கள் முத்தாள், வளர்மதி, உறுப்பினர்கள் தினேஷ்குமார், பாலு, பாலமுரளி கிருஷ்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.