கோவை போத்தனூரில் பாதாள சாக்கடை பணிக்காக சாலை போக்குவரத்து மாற்றம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாநகராட்சி குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டப் பணிகள் போத்தனூர் பிரதான சாலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போத்தனூர் காவல் நிலையத்திலிருந்து போத்தனூர் ரயில் நிலையம் வரையுள்ள சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு மீதமுள்ள பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலை சீரமைக்க வேண்டி உள்ளது.இதற்காக அப்பகுதி முழுவதும் சாலையை அடைத்து பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனால் (மார்ச் ஐந்தாம் தேதி முதல்) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
எனவே சாரதா மில் ரோடு பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் காவல் நிலையம் எதிரே உள்ள கருணாநிதி நகர் ஜோதி நகர் வழியாக சென்று சாரதா மில் ரோட்டை அடையலாம்.
இது ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து காவல் நிலையம் வழியாக குறிச்சி செல்ல அனுமதி இல்லை. மாநகராட்சியின் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.