மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு மனுகொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!
மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு AITUC பெண் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு மாநில மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் மூலம் கோரிக்கைகள் நிறைவேற்ற மனுகொடுக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று
வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமாரி மாவட்டத்தில் சுமார் 50 கிராமங்களில் மனு கொடுக்கப்படுகிறது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் தோவாளை தாலுகாவிற்குட்பட்ட பூதப்பாண்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுக்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள்.
1. பெண்கட்டுமான தொழிலாளர்களுக்கு ஐம்பது வயதில் பென்ஷன் வழங்கவேண்டும்,
2. அவ்வாறு வழங்கப்படும் பென்ஷன் ருபாய் ஆறாயிரம் வழங்கவேண்டும்.
3. Epf,Esi திட்டத்தை உடனே அமல்படுத்தவேண்டும்,
4. பேறு கால நிவாரணம் வழங்கவேண்டும்,
5. குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் தலைமை தோழியர் ஹேமா அனில்குமார் இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட பொறுப்பாளர், முன்னிலை தோழியர் M.தங்கம்நாராயணசாமி இந்திய தேசிய மாதர் சம்மேளன பூதப்பாண்டி கிளை பொறுப்பாளர் மற்றும் தோழியர் இராஜ லெட்சுமி சிவக்குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுற்றுசூழல் செயலாளர் பூதப்பாண்டி,தோழியர் சுடலீஸ்வரி செம்பாலை ஜீவா மகளிர் சுய உதவிக்குழு செயலாளர் பூதப்பாண்டி, தோழியர்.ஜெயந்திசெல்வம் ஜீவா மகளிர் சுய உதவிக்குழு பொருளாளர் பூதப்பாண்டி, தோழியர் சண்முகலெட்சுமி,தோழியர் ப்ரியா மணிகண்டன்,தோழியர் விசாலம்.
இந்த நிகழ்வினை மேலும் சிறப்பித்தவர்கள்.தோழர் G.சுரேஷ் மேசிய தாஸ் AITUC குமரி மாவட்ட செயலாளர், தோழர்.S.அனில்குமார் MA பூதப்பாண்டி பேரூராட்சி துணைத்தலைவர்,
S.நாராயணசாமி, துணைச்செயலாளர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,கன்னியாகுமாரி மாவட்டம்,
தோழர்.தா.சுபாஷ் சந்திர போஸ், மாவட்டச்செயலாளாளர் கன்னியாகுமாரி மாவட்டம்,
தோழர்.k.சஜேஷ், அனைந்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்டச்செயலாளர் கன்னியாகுமாரி மாவட்டம்,தோழர்.தா.மகேஷ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பூதப்பாண்டி கிளை பொருளாளர், ஆ.காளிமுத்து AITUC பூதப்பாண்டி கிளை செயலாளர், தோழர்.சுரேஷ் AITUC மோட்டார் வாகன பொறுப்பாளர் பூதப்பாண்டி.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.