கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் புலியின் தாக்குதல். மூணார் பெரியார் எஸ்டேட் பகுதியில் வசித்து வரும் வாச்சர் இளங்கோவன் அவருடைய பசு மாடும் மற்றும் கன்றுகுட்டி நேற்று காட்டிற்கு சென்று வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடியும் பசு மாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை இன்று காலையில் காட்டில் ஒரு பகுதியில் புலியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வரும் பகுதியில் புலியின் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன இச்சம்பவம் வளர்ப்பு மிருகங்களை மட்டுமல்ல அங்கு வசித்து வரும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் வீட்டின் அருகிலோ மாலை நேரங்களிலோ வெளியே செல்ல மக்கள் அச்சம் கொள்கின்றனர். இதற்கு வனத்துறை அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது எனவே கேரளா அரசு வனத்துறையினர் உடனடியாக இதில் தலையிட்டு சரியான தீர்வை காண வேண்டும் என தேயிலைத் தோட்ட தொழிலாளர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன், மூணார்.