கோவை மாவட்டம் வால்பாறையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தை சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்துள்ளதால் சிறுத்தை, செந்நாய், புலி,கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் குடியிருப்பு பகுதியாக இப்பகுதி மாறிவிடக்கூடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை காலதாமதம் செய்யாமல் எடுத்து மாணவ, மாணவியர் ஆசிரியர் மற்றும் இப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-M.சுரேஷ்குமார்.