கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மக்களின் துயர் துடைக்க சிறப்பாக அமைந்துள்ளது தூய இருதய ஆலயம். இந்த ஆலயத்தின் சார்பாக சிலுவை பாதை யாத்திரை நடைபெறுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக நோய் தொற்று பரவல் காரணமாக சரியான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்து வந்தது.
தற்பொழுது தூய இருதய ஆலய சிலுவைப் பாத யாத்திரை வால்பாறை ஆலயத்தில் இருந்து கருமலை அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு சென்றது.
இந்த சிலுவை பாத யாத்திரையில் திரளான மக்கள் கலந்து கொண்டு அமைதியாகவும் வரிசையாகவும் தெய்வத்தினை வேண்டி வந்தார்கள்.
இந்த பாதயாத்திரையில் ஆலய பணியாளர்கள் மற்றும் பங்கு பேரவை மக்கள் மற்றும் கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.