கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றிலும் அதிக அளவு எஸ்டேட் பகுதியில் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளுக்கு சென்று வரவும் வால்பாறை பகுதியில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு சில பேருந்துகள் சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. நாம் செய்திகளில் பார்த்திருப்போம், மழைக்காலங்களில் பேருந்துக்கு உள்ளேயே குடை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் ஒரு சில பேருந்துகள் உள்ளன.
சில பேருந்துகளில் இருக்கைகள் சரிவர இல்லாமல் இருக்கும். அதுபோன்று வால்பாறையில் ஒரு பேருந்தின் முன்பக்க கண்ணாடி விரிசல் விட்டு உடைந்து காணப்படுகிறது. இந்தபேருந்து பல நாட்களாக இதே நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. போக்குவரத்து துறை அதிகாரிகளும் பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மலைப் பிரதேசங்களில் செல்லும் பேருந்துகள் இதுபோன்று நிலைமையில் இருந்தால், காற்றின் வேக மாறுபாடு காரணமாக காற்றழுத்தம் ஏற்பட்டு கண்ணாடி சிதறிவிடும் சூழ்நிலை ஏற்படும். அந்த சமயங்களில் ஓட்டுநருக்கோ பயணிகளுக்கோ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த பேருந்தின் முன்பக்க கண்ணாடியை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.