கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதியில் உள்ளன.இந்த எஸ்டேட் பகுதிகளுக்கு வால்பாறையில் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் செல்லும் வழித்தடத்தில் சாலைகள் மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்களினால் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தது மேலும் செய்தித்தாள்களிலும் இது பற்றி செய்திகள் வந்திருந்தன.
இந்த சூழ்நிலையில் முடீஸ் பகுதியில் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப் பட்டிருந்தது.சாலை சீரமைப்பு பணி முடிந்தவுடன் பார்த்தால் சாலை குறிப்பிட்ட அகலத்தில் மட்டுமே உள்ளது இதில் இரண்டு பேருந்துகள் வந்தால் ஒரு பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கி வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே மற்றொரு பேருந்து செல்லும் அளவிற்கு உள்ளது ஆனால் சாலைக்கும் பேருந்து வழிவிடுவதற்காக இறங்கும் இடத்திற்கும் இடையே உள்ள உயரம் அதிகமாக உள்ள காரணத்தினால் பேருந்து அதிகப்படியாக சாய்ந்து குழிக்குள் இறங்கி நின்று விடுகிறது அல்லது பழுதடைந்து பேருந்து இயங்க முடியாமல் நின்று போகிறது.இதனால் பேருந்து பயணிகளும் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கனரக வாகனமான பேருந்துக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண இரு சக்கர வாகனங்களுக்கும் இலகுரக வாகனங்களின் நிலைமையை எண்ணி பாருங்கள்.சாலையை சரியாக கவனிக்காமல் வந்துவிட்டாலோ அல்லது இரவு நேரங்களிலோ இதுபோன்ற இடங்களில் வரும் பொழுது விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலைக்கு இரண்டு பக்கமும் உள்ள அதிக பள்ளமாக குழியாக உள்ள பகுதிகளை மேடு படுத்தி சாலைக்கு இணையாக உள்ளவாறு சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டுனர்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.