கோவை விளாங்குறிச்சி ரோடு பால்காரர் தோட்டத்தில் அமைந்துள்ள மல்லிகார்ஜுன் ட்ரேடர்ஸ் என்ற கடை உரிமையாளர் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து தனது கடைக்கு சொந்தமான பொருட்களும் வாகனங்களையும் நிறுத்தி வைப்பதால் மீதமுள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்களது வாகனத்தை நிறுத்த இயலாத சூழ்நிலை ஏற்படுகிறதாகவும் அருகிலுள்ள கடைகள் மாசு ஏற்படுவதாகவும் மேலும் அருகில் உள்ள கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய வாகனத்தை நிறுத்த இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகிறது மேலும் மாலை பொழுது முதல் இரவு வரை மது பிரியர்கள் மது அருந்துவதற்காக இந்த இடத்தை உபயோகம் செய்கின்றனர் பின்னர் அங்கிருந்து வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.
இதனால் விபத்து ஏற்பட காரணமாகின்றது. அப்பகுதியின் கடைக்காரர்கள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி இதற்கான துறையை அணுகியுள்ளனர்.
மேலும் அருகிலுள்ள கடைக்காரர்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் எடுத்துச் சொல்லியும் அவர் மக்களுக்கு இடையூறு தரும் வகையிலும் மாசு ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் அவரிடம் சுமுகமாக பேசுவார்களா அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது .
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.