ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் நிறுவனர் நாள் விழா!!!!
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் எக்ஸ் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை
கம்பம் பள்ளத்தாக்கின் கல்வியின் விலாசமாய் திகழும், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் ஐம்பெரும் விழா மார்ச்
11.03.2023 முதல் 15.03.2023 வரை கல்லூரி வளாகத்தில் உள்ள உள்விளையாட்டரங்கத்தில் கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் ஹாஜி M. தர்வேஷ் முஹைதீன் B.Sc. அவர்கள் தலைமையில், மேலாண்மைக் குழு தலைவர் ஜனாப் S. செந்தல் மீரான், ஹாஜி G.நத்தர் மீரான் உள்ளிட்ட மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், கல்லூரியின் முதல்வர் ஹாஜி முனைவர் H. முகமது மீரான் M.A. Ph.D., முன்னிலையில் மிகச்சிறப்பாக 5 நாட்கள் நடைபெற்றது.
இவ்விழாவின் இறுதி நாள் நிகழ்வாக 15.03.2023 புதன் கிழமை நிறுவனர் நாள் விழாவாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத்தலைவருமான எம்.அப்துல் ரஹ்மான் எக்ஸ் எம்பி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை ஒருங்கிணைப்பாளர் கோம்பை நிஜாமுதீன், ஊர் முக்கியஸ்தர்கள், ஜாமாஅத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
போட்டோ உதவி சேட் தேனி
-ஹனீப்.