NALAIYA VARALARU
30 ரூபாய்க்கு முழு சாப்பாடு…கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி!!!
‘அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி’! இது வள்ளுவர் வாக்கு.
வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்க RVS குழுமத்தின் பத்மாவதி சோஷியல் சர்வீஸ் மையம் கோயம்புத்தூரில் சூலூர் குமரன் தோட்டத்தில் திறந்துள்ள உணவகத்தில் 30 ரூபாய்க்கு சைவச் சாப்பாடு தருகிறார்கள்.
இன்று திறக்கப்பட்ட இந்த சேவை நோக்கிலான உணவகத்தில் காலை , மதியம் , இரவு மூன்று வேளையும் இதேபோல மிகக்குறைவான விலையில் வெரைட்டியான சைவ உணவுகள் மிகத் தரமாகக் கிடைக்கின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நூற்றுக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணக்கூடிய மிகப்பெரிய அறை , மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் ஒட்டுமொத்த வளாகம், பெரிய கார் பார்க்கிங் வசதி , தூய்மையான கழிப்பறை வசதி , அடர்ந்த மரங்களடங்கிய குளுமையான, பசுமையான சூழல் என இந்த சேவை மையம் கம்பீரமாக நிற்கிறது.
இன்றைய மதிய உணவு சோறு , சாம்பார் ,புளிக்குழம்பு, ரசம் , பாயசம் , கூட்டு , பொரியல் , ஊறுகாய் , மோர் என மிகச்சுவையாக இருந்தது.பொதுமக்கள் கூறினார்கள் !!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை