NALAIYA VARALARU
74 வருட பாரம்பரிய கால்பந்து போட்டியில் கூடாரவளை எஸ்டேட் வெற்றி!!!
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாறு பகுதியில் இந்தியா சுதந்திரத்திற்கு முன்பாகவே தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு என கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது வழக்கமாகி உள்ளன.
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் கால்பந்து போட்டியானது நிறுத்தி வைக்கப்பட்டது. சில காலங்களுக்கு பிறகு தொடர்ச்சியாக நடைபெற்றது. அதற்கு பின்னதாக தற்போது கொரோனா காலகட்டங்களில் கால்பந்து போட்டியானது நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கொரோனா நோய் தொற்றுக்கு பின்னர் இந்த வருடத்தில் மீண்டும் கால்பந்து போட்டியானது புத்துணர்ச்சி பெற்று ஆரம்பிக்கப்பட்டது. இதில் பல தேயிலை நிறுவனங்களைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 14 அணிகளாக கலந்து கொண்டனர்.
நேற்று இறுதிச்சுற்று கால்பந்து போட்டி மூணாறில் உள்ள கால்பந்து மைதானத்தில் நல்ல தண்ணி எஸ்டேட் மற்றும் கூடாரவளை எஸ்டேட் இடையே நடைபெற்றது. கடைசியில் பெனால்டி ஷார்ட் அடித்து அதிகமாக ஒரு கோல் அடித்து கூடாரவளை எஸ்டேட் கோப்பையை கைப்பற்றியது.
KDHP நிர்வாக இயக்குநர் மேத்தியூ ஆப்ரகாம் அவர்கள் பரிசை வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.