G payஇந்த சேவையின் மூலம் பணத்தை பெறுவதும் அல்லது வேறொருவருக்கு பணத்தை அனுப்புவதும் மிக மிக எளிமையாக உள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையே அதிக அளவில் விரும்புகின்றனர். ஓட்டல், டீக்கடை, மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் UPI மூலமாக பணம் செலுத்தும் வசதியுள்ளது.
இந்நிலையில் G pay மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது G pay க்கு பணத்தை அனுப்புகிறார். உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்ப மோசடி நபர் கூறுவார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் அனுப்பினால் அருகிலுள்ள காவல்நிலையம் வந்து பணமாக வாங்கி கொள்ள செல்லுங்கள் என்று தமிழக காவல்துறை அறிவுறுத்துள்ளனர்.
மேலும் யாரோ ஒருவர் தவறாக உங்கள் கணக்கிற்கு பணம் செலுத்திவிட்டதாக கூறி பணம் திருப்பி கேட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகுமாறும் தெரியாத நபர்கள் உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தினாலும் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.