NALAIYA VARALARU
எல்.கே.ஜி மாணவன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்!
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள சாண்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்த இந்த பள்ளி வரும் கல்வி ஆண்டு முதல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது இதற்கான அறிவிப்பினை பள்ளியின் துணைத் தாளாளர் எஸ்.பி.சாண்டி விழாவில் அறிவித்தார். வரும் ஜூன் மாதம் முதல் பள்ளியில் பிளஸ் 1 செயற்கை துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் சாண்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் உலக சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) பிரபாகுமார் தலைமை வகித்தார். பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி மதுபாலா வரவேற்றார். பள்ளி ஆண்டறிக்கையை தலைமை ஆசிரியை இந்திரா காந்தி வாசித்தார்.
இதில் எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. சாண்டி மேல்நிலைப் பள்ளி எல்கேஜி வகுப்பில் படிக்கும் செல்வ சந்தோஷ் என்கிற மாணவன் டவுன் சின்றோம் எனப்படும் அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தையாகும். இந்த குழந்தைக்கு புரிதல், அடையாளம் காணுதல் என்பது சாதாரண மனிதரைவிட 50 சதவீதம் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்வ சந்தோஷ் ஒரு சில நிமிடத்தில் 54 அட்டைகளில் உள்ள படத்தின் பெயரை சொன்னவுடன் அதனை சரியாக அடையாளம் கண்டுபிடித்தார். இது உலக சாதனையாக கண்டறியப்பட்டு சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் டீம் சார்பில் விருது மற்றும் பாராட்டு சான்றிதழை முனைவர்.நீலமேகம் நிமலன் வழங்கினார். இது போன்ற மாணவரை உருவாக்கிய சாண்டி பள்ளிக்கு பாராட்டு சான்று வழங்கினார். நிறைவாக எல்கேஜி மாணவி மது ஸ்ரீ நன்றியுரை ஆற்றினார். பள்ளி செயலாளர் சிவசங்கர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.