NALAIYA VARALARU
ஒட்டப்பிடாரத்தில் குதிரை வண்டி, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு குதிரை வண்டி மாட்டு வண்டி பந்தயம் மற்றும் காபடி பேட்டிகள் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு 12.04.2023 அன்று காலையில் ஒட்டப்பிடாரத்தில் இருந்து ஒசானத்து சாலையில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் ஒட்டப்பிடாரம் முன்னாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் மாவட்ட வழக்கறிஞர் O.T ஜெயலலிதா கலந்து கொண்டார்.
முதல் பரிசு ரூபாய் 30075 கடம்பூர் பெரிய ராஜா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வழங்கினார்.
குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஒட்டப்பிடாரம் இளைஞரணி சார்பில் நடத்தப்பட்டது. மாவட்ட துணை கண்காணிப்பாளர் மணியாச்சி அவர்களின் தலைமையில் ஒட்டப்பிடாரம் புதியம்புத்தூர் சாலையில் 10 மைல் தூரம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு 10001 ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா வழங்கினார்.
ஒட்டப்பிடாரம் உலகாண்ட ஈஸ்வரி கோவில் சார்பில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் ஒட்டப்பிடாரம் குறுக்குச்சாலை சாலையில் ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் தலைமையில் நடைபெற்றது. முதல் பரிசு 25000 ரூபாய் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா வழங்கினார்.
VPKC காபடி குழு 16ஆம் ஆண்டு மாபெரும் காபடி பேட்டிகள் 2 நாட்கள் 40 அணிகள் கலந்து கொண்டு நடைபெற்றது. முதல் பரிசு ரூபாய் 30000 O.T சிவகுமார் அவர்கள் வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.