NALAIYA VARALARU
ஒட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக தெருக்கூத்து நடைபெற்றது!!
ஓட்டப்பிடாரம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி மூலம் விவசாய மானிய திட்டம் பற்றி பாஞ்சாலங்குறிச்சி விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதில் தூத்துக்குடி உழவர் பயிர்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் மனோரஞ்சிதம் அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்குசிறப்புறையாற்றினார் . ஓட்டப்பிடாரம் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குநர் அலாய் பெர்னாண்டோ அவர்கள் தலைமையுறையற்றினார்.பின்னர் வேளாண்மை அலுவலர் சிவகாமி அவர்கள் வேளாண்மை உழவர் நலத்துறையில் வழங்கபடும் மானிய திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் அட்மா உதவி தொழில்நுட்ப மேளாலர் செல்வகுமார் உழவன் செயலி பயன்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் அக்னி குஞ்சு கலை குழு பேச்சி துரை அவர்கள் தலைமையில் தாரை தப்பட்டம், கரகாட்டம் ஒயிலாட்டம் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் திட்டம் பற்றி எடுத்துரைத்தனர்.
இந்த கூட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலாதேவி யோகராஜ் நன்றியுரை கூறினார். இப்பயிற்சிகான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் மற்றும் மங்கையர்கரசி சிறப்பாக செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.