ஓட்டப்பிடாரம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் kisan gosthesis நிகழ்ச்சி மூலம் சிறு தானியம் மற்றும் இயற்கை விவசாயம் பற்றி ஜேக வீரபாண்டிய புரம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது .
பேரணியை பஞ்சாயத் தலைவர் சுரேஷ் தொடங்கி வைத்தார் மற்றும் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம் தொழில் நுட்ப வல்லுநர் முருகன் அவர்கள் சிறு தானியம் சாகுபடி தொழில் நுட்பம் பற்றி பேசினார். வாகைக்குளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம் பண்ணை மேலாளர் தாமோதரன் அவர்கள் சிறு தானியம் பயன்பாடு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு குறித்து பேசினார்.
வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குநர் அலாய் பெர்னாண்டோ அவர்கள் தலமையுறை யாற்றினார் பின்னர் வேளாண்மை அலுவலர் சிவகாமி அவர்கள் வேளாண்மை உழவர் நலத்துறையில் வழங்கபடும் மானிய திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
அட்மா உதவி தொழில்நுட்ப மேளாலர் செல்வகுமார் உழவன் செயலி பயன்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா நன்றியுறை கூறினார். இப்பயிற்சிகான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் மற்றும் மங்கையர்கரசி சிறப்பாக செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.