கந்து வட்டியின் கொடுமை? நடந்தது என்ன??

கந்து வட்டி

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் அருகே உள்ள கஞ்சிகுழி புண்ணையாறு என்ற இடத்தில் சில தினங்களுக்கு முன்பு கணவன் (பிஜூ) மணைவி இருவரும் திடீரென தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போது அவர் தன்னுடைய அம்மாவின் பெயரில் உள்ள 75 சென்ட் நிலத்தை அடகு வைத்து அதன் பேரில் கந்து வட்டிக்கு பணம் வாங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.

கந்து வட்டிக்காரர்களின் வட்டி கொடுமை அதிகரித்த காரணத்தினாலும் அவர்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்ததாலும் அம்மாவின் பத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்றதாலும் மனம் உடைந்து தம்பதியினர் தனது இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டனர் என தெரியவந்துள்ளது. பிஜு தற்கொலை முயற்சியில் மரணம் அடைவதற்கு முன்னால் அவரை காப்பாற்றி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவரும் இறந்து போனார். கடந்த சில காலங்களாகவே கந்துவட்டியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் கந்து வட்டி வேட்டையில் சிக்கிக்கொண்ட பல குடும்பங்கள் இதே போன்ற தவிப்பதாகவும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று கடந்த வருடம் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவாகரத்தில் கந்துவட்டி கொடுமையால் தான் அவர் மரணம் அடைந்தார் என கூறப்பட்ட நிலையில் அது அப்படியே மூடி மறைக்கப்பட்டது.

தற்பொழுது மீண்டுமாக இத்தம்பதியின் மரணம் அதை நினைவு படுத்தியது என்றும் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மரணம் அடைந்த பிஜூ வின் வீட்டில் அவருடைய அம்மாவின் பேரில் உள்ள நிலத்தில் சொத்து உரிமை பத்திரம் காணாமல் போனதை தொடர்ந்து இது கந்துவட்டிக்காரர்களின் செயல் என்பதை காவல்துறை விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

இறந்த பிஜிவின் அம்மாவிடம் கேட்ட பொழுது தன்னுடைய மகன் மருமகளுக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நடக்க கூடாது எனவும் இதன் நிமித்தமாக தன்னுடைய பேரக்குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் சொத்து பத்திரத்தை மீண்டும் மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல கிராமங்களிலும் கீழ்தட்டு மற்றும் இடைத்தட்டு மக்கள் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்படுவதும் அதில் சிக்கிக் கொள்வதும் வழக்கமாக உள்ளது எனவே கந்துவட்டி என்ற சூழலில் சிக்கிக் கொள்ளாமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நாளைய வரலாறு செய்தி நினைவூட்டுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp