கன்னியாகுமரி மாவட்டம் அருகில் உயிர் பலி வாங்க துடிக்கும் சாமிதோப்பு பயணிகள் நிழற் கூடம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ,வியாபாரிகள் மற்றும் அரசியல் காட்சிகள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பகுதியும் ஒன்று. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பெரும்பாலானோர் அரசு பேருந்துகளில்தான் வந்து செல்கின்றனர்.
இங்கு அமைந்துள்ள பேருந்து பயணிகள் நிழற்கூடத்தின் மேல்பகுதி இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. இது பொதுமக்களுக்கு பாதுகப்பற்றதாக உள்ளது . எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும்.
பயணிகள் உயிரை காவு வாங்க துடிக்கும் சாமிதோப்பு பேருந்து பயணிகள் நிழற்கூடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பா்களா????… சோ.சுரேஷ், மாநில துணை தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.