NALAIYA VARALARU
காவல் துறையினருக்கு டி.ஐ.ஜி முத்துச்சாமி அவர்கள் கடும் கட்டுப்பாடு!
கடமையை மறந்து செயல்படும் காவல்துறையினருக்குடி.ஐ.ஜி முத்துச்சாமி அவர்கள் கடும் கட்டுப்பாடு. கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் என வேலூர் எஸ்.பி. அவர்களுக்கு உத்தரவு.
காவல் நிலையத்திற்கு வழக்கு தொடர்பாக புகார் கொடுக்க வரும் பொது மக்களிடம் புகாரை வாங்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும் விபத்து தொடர்பான வழக்குகளுக்கு இரு தரப்பினரையும் அழைத்து வழக்குப் பதியாமல் பேரம் பேசி சம்பத்தப் பட்டவர்களுக்கு பணம் வாங்கி கொடுக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காவல்துறையில் பணிபுரியும் ஒரு சில காவலர்களும் காவல்துறை அதிகாரிகளும் இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து செய்யும் செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் மத்தியில் காவல்துறைக்கு மிகப்பெரும் அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.எனவே இது குறித்து டி.ஐ.ஜி முத்துச்சாமி அவர்கள் வேலூர் மாவட்ட காவல் நிலையங்களையும் காவல்துறை அதிகாரிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று வேலூர் எஸ்.பி அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-C.ராஜேந்திரன்.