NALAIYA VARALARU
கோவையில் சேவா ரத்னா எம் ஆர் எம் வியாபாரிகள் சங்கத்தின் 4 வது ஆண்டு விழா குடும்ப விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது…
சேவாரத்னா எம் ஆர் எம் வியாபாரிகள் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழா மற்றும் குடும்ப விழா இடையர்பாளையம் கவுண்டம்பாளையம் சாலையில் உள்ள ஜோதிமணி பொன்னையா திருமண மண்டபத்தில் நடைபெற்றது சங்கத்தின் தலைவர் ஏ எஸ் எம் ஆனந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சுதாகர், லிங்கசாமி, சேர்ம பாண்டியன், ஹரி கிருஷ்ணன், ராஜன், திருமேனி, செல்வதாசன், காமராஜ், மாரீஸ்வரன், இன்பராஜ், பட்டுராஜ், மயில்வாகனம், பட்டுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சங்க கொடியை தலைவர் ஆனந்தம் ஏற்றி வைக்க காந்தி படத்தை கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மாடசாமி என்கிற சந்திரன் திறந்து வைத்தார் தொடர்ந்து தமிழக வணிகர்களின் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராஜசேகர் டாக்டர் சேவா ரத்னா எம் ஆர் முருகன் படத்தை திறந்து வைத்தார்.. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது..
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேவாரத்னா எம் ஆர் எம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ எஸ் எம் ஆனந்தம் தென் மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவையிலிருந்து செல்வதாகவும்,எனவே கோவை வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
-சீனி, போத்தனூர்.