NALAIYA VARALARU
கோவை மாநகர காவல் ஆணையாளர் 50 வயதை கடந்த காவலர்களுடன் கலந்துரையாடல்!! காவலர்கள் மகிழ்ச்சி!!!
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 50 வயது கடந்த காவலர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்துரையாடினார். இதில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலில் காவலர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் காவல் ஆணையாளர் கேட்டறிந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது பலரும் தங்களுக்கு 50 வயதிற்கு மேல் ஆகி விட்டதால் நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் மருத்துவ பிரச்சனைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். எனவே அவரரவர் வீட்டின் அருகிலேயே பணியினை ஒதுக்கித் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும் கேட்டுக் கொண்டனர். காவலர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாநகர காவல் ஆணையாளர் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் அவர்களின் வாழ்நாள் அனுபவங்களையும் கேட்டறிந்த காவல் ஆணையாளர் அவர்களிடம் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் எனவும், பணி சம்பந்தமான தேவைகள் எதுவாயினும் தெரிவிக்கும் படி கூறினார்.
50 வயது கடந்த தங்களை அழைத்து மாநகர காவல் ஆணையாளர் நலம் விசாரித்ததும் தங்கள் தேவைகளை கேட்டறிந்ததும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவலர்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.