இறைச்சி கடையால் எவ்வாறான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை சமூக ஆர்வலர் முனைவர் இரா. சிதம்பரம் அவர்கள் கூறுகையில்:-
கோவை மாவட்டம் போத்தனூர் சாரதா மில் ரோடு அருகே செயல்பட்டு வரும் இறைச்சி கடையால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த இறைச்சி கடையில் ஆடு கோழி ஆகியவற்றை அறுத்து சுத்தம் செய்து அதன் கழிவுகளை முறையாக பராமரிக்காமல் சுற்றுப்புறத்தை சீர்கேடாக்கி வருகின்றனர்.
இந்த இறைச்சி கடைக்கு அருகாமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தண்ணீர் பிடிக்க தண்ணீர் குழாய் (பைப் லைன்) போடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் குழாயில் நீண்ட அளவுள்ள தண்ணீர் குழாயை இணைத்து(ஓஸ் என்று சொல்வார்களே அதை இணைத்து) இறைச்சி கடைக்கு தேவையான தண்ணீரை முழுவதுமாக எடுத்துக் கொள்வது மட்டுமின்றி ஆடுகளை அங்கேயே வெட்டி அதை சுத்தம் செய்வது உறித்த ஆடுகளை கொக்கியில் மாட்டி அப்படியே ஓசை கொண்டு தண்ணீர் அடித்து சுத்தம் செய்வது அதன் பிறகு ஓசை அப்படியே விட்டு விடுவது அந்த ஓசின் வழியாக மீண்டும் அசுத்தமான நீர் உள்ளே புகுந்து விடுவதுமாக உள்ளது. இதனாலையே அந்த பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க தயங்குகின்றனர் அதையும் மீறி பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க சென்றாள் தண்ணீர் குழாயுடன் ஓஸ் பைப் இணைக்கப் பட்டிருப்பதால் தண்ணீர் பிடிக்க முடியாமல் திரும்பி வருவதும் வாடிக்கையாகி உள்ளது.இந்த கடையால் சுகாதாரம் என்பது கேள்விகுறி ஆகி உள்ளது.மேலும் இது சம்பந்தமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
-ஈஷா. ராஜேந்திரன்.