ஏசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். அதன் நிறைவாக ஏசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலங்களிலும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பங்குத்தந்தை ஆன்றனி புருனோ ஆகியோர் பெருவிழா திருப்பலி நிறைவேற்றினார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல் தூத்துக்குடி சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயம், தூய பனிமயமாதா ஆலயம், இன்னாசியர் ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீஸ் எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர்,
-முத்தரசு கோபி.