NALAIYA VARALARU
தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் 4 வது அத்தியாயம் நடைபெற்றது…!!
நவீன கால சவால்களை இளம் தலைமுறையினர் எதிர் கொள்ளும் விதமாக தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் நான்காவது அத்தியாயம் கோவை தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது…
நவீன கால அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி வேகமடைந்து வரும் நிலையில்,இது குறித்த நேர்மறையான சவால்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இது போன்ற சவால்களை இளம் தலைமுறை மாணவ,மாணவிகள் தெரிந்து கொள்ளும் விதமாக தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டின் நான்காவது அத்தியாயம் சைமுன் (SIMUN) கோவையை அடுத்த எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் தலைவர் அசோக் குமார் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர்,இரண்டாவது உலகப்போர் அதன் தொடர்ச்சியாக பசுமை புரட்சி என மனிதர்களுக்கு ஒவ்வொரு காலகட்டமும் சவாலாகவே இருந்தால் ளதாகவும் அதனை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்கள் சரிவர செய்யப்பட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளதாக தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அண்மை காலத்தில் உலகையே ஆட்டி படைத்த கொரோனா கால நேரங்களில் நடைபெற்ற துன்பங்களை நினைவு கூர்ந்த அவர்,அது போன்ற பேரிடர் சம்பவங்களை எதிர் கொள்ள நம்மை நாம்ஙதயார் படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு பெரும் சவாலாக இருப்பது நவீன தொழில் நுட்ப வளர்ச்சி என குறிப்பிட்ட அவர்,இதில் சில சாதகங்கள் இருந்தாலும் எதிர்மறையான விளைவுகளை எதிர் கொள்ள இளம்தலைமுறை தங்களது திறன்களை வளர்த்தி கொள்வது அவசியம் என தெரிவித்தார்.
மூன்று நாட்கள் நடைபெற இந்த மாநாட்டில், இன்றைய மாணவ மாணவிகள் உலக அறிவோடு சர்வதேச பிரச்சனைகளான அரசியல் சமூக பொருளாதார சுற்றுச்சூழல் மற்றும் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.
-சீனி, போத்தனூர்.