பசுமை நர்சரி & பிரைமரி பள்ளியின் 11 ஆம் ஆண்டு விழா நேற்று மாலை பசுவந்தனையில் நடைபெற்றது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதி பசுவந்தனை பசுமை நர்சரி & பிரைமரி பள்ளி 11ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பள்ளியில் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆடல் பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு காரத்தே பற்றிய கலை நிகழ்ச்சிகள் பிரகாஷ் ஆசிரியர் எடுத்துக் கூறினார்.
பின்னர் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் தமிழ் நாடு நர்சரி & பிரைமரி மெட்ரிக் சங்கம் மாவட்ட செயலளார் கமலக்கண்ணன் மற்றும் சந்தனமாரியம்மாள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி உதவிப்பேராசிரியர் கோவில்பட்டி, லட்சுமிசிதம்பரம் பசுவந்தனை பஞ்சாயத்து தலைவர், நாயகம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பசுவந்தனை, சரவணக்குமார் நிர்வாகம் , ஆகியோர் சிறைப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்கள்.
பள்ளி தலைமை ஆசிரியர் கணேஸ்வரி தலைமையில் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார் .
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.