SBI வங்கியால் படாத பாடுபடும் பொதுமக்கள் போதுமான அறிவிப்புகள் இல்லாமல் UPI பரிவர்த்தனைகளை நிறுத்தியதால் Google Pay, Phone Pay உள்ளிட்ட செயலிகள் வழியாக பணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.
UPI பரிவர்த்தனை இருப்பதாக நம்பி செலவிட்ட பொருட்களை வாங்கிய மக்கள் அதற்கான தொகையை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து வங்கி நிர்வாகம் நிதியாண்டு முடிவு என்பதால் சுணக்கம் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் இருந்து முறையான அறிவிப்பு வெளியாகும் வரை UPI செயலிகளை நம்பி மக்கள் செலவிட வேண்டாம் என நாளைய வரலாறு புலனாய்வு இதழின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
-M.சுரேஷ்குமார்.