NALAIYA VARALARU
பன்னாட்டு நிறுவனமான இன்னோ வேல்லி வொர்க்ஸ்-இன் 10 ஆயிரம் சதுர அடியில் புதிய அலுவலகம் திறப்பு!!
கோவையில் பன்னாட்டு நிறுவனமான (INNO VALLEY WORKS) இன்னோ வேல்லி வொர்க்ஸ்-இன் 10 ஆயிரம் சதுர அடியில் புதிய அலுவலகம் திறப்பு
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனமான (INNO VALLEY WORKS) இன்னோ வேல்லி வொர்க்ஸ் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. அமெரிக்காவில் ஒரு கிளையை அமைத்துள்ள (INNO VALLEY WORKS) இன்னோ வேல்லி வொர்க்ஸ் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக கோவை சித்ரா பகுதியில் பத்தாயிரம் சதுர அடியில் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதன் துவக்க விழா இன்று மாலை நடைபெற்றது.
திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக (TexVelley) டெக்ஸ்வேல்லி நிர்வாக இயக்குனர் ராஜசேகர் பெரியசாமி மற்றும் (SALESFORCE VICE PRESIDENT) சேல்ஸ் போர்ஸ் துணை தலைவர் கமலகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
(INNO VALLEY WORKS) இன்னோ வேல்லி வொர்க்ஸ் நிறுவனர்கள் திலீப்பன் தங்கவேல் மற்றும் மனோஜ் தங்கவேல்
பேசுகையில்,
(INNO VALLEY WORKS) இன்னோ வேல்லி வொர்க்ஸ் ஒரு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். உலகத்தின் தலைசிறந்த (SALESFORCE CRM) சேல்ஸ் போர்ஸ் சிஆர்எம் தொழில் நுட்பத்தின் மூலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு தொழில் தீர்வுகளை வழங்கி வருகிறது.
மேலும் (INNO VALLEY WORKS)
இன்னோ வேல்லி வொர்க்ஸ் (SALESFORCE SILVER CONSULTING PARTNER) சேல்ஸ் போர்ஸ் சில்வர் கன்சல்டிங் பார்ட்னர் ஆக உள்ளது. 2018 ஆம் ஆண்டு 2 பணியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது பத்தாயிரம் சதுர அடியில் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது இந்நிறுவனம் 70 தொழில் வல்லுனர்கள் சான்று பெற்ற பணியாளர்களுடன் தனது வாடிக்கையாளர்களுக்கான தொழில் முறை மென்பொருள் தீர்வுகளை திறம்பட வழங்குவதில்
(INNO VALLEY WORKS) இன்னோ வேல்லி வொர்க்ஸ் தனித்தன்மையாக இருந்து வருகிறது.
மேலும் அடுத்த கட்டமாக கோவை தலைமை அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது. மேலும் அடுத்த வருடத்தில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்பட வைப்பதே தங்களுடைய நோக்கம் என தெரிவித்தனர். மென்பொருள் தீர்வுகளை திறம்பட வடிவமைத்து தரும் (INNO VALLEY WORKS)
இன்னோ வேல்லி வொர்க்ஸ் ஒரு சிறந்த பணியிடம் என்று தரச் சான்று (GREAT PLACE TO WORK CERTIFIED) பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தரமான மென்பொருள் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் (INNO VALLEY WORKS) இன்னோ வேல்லி வொர்க்ஸ் ஒரு (ISO) ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்று நிறுவனம் ஆகும் என தெரிவித்தனர்.
-சீனி, போத்தனூர்.