NALAIYA VARALARU
பூதப்பாண்டியில் மின் கம்பத்தில் விளக்கு பொருத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்குட்பட்ட பூதப்பாண்டியில் சர் சிபி நினைவு அரசுமேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியின் அருகிலுள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு பொருத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பகுதியில் இரவில் இந்த மின்கம்பத்தில் மின்விளக்கு இல்லாததால் இப்பகுதி இருள் சூழ்ந்துள்ளது.எனவே இப்பகுதியினை கடந்து செல்லும் பொதுமக்கள் சற்று அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இரவில் டியூசன் சென்று வரும் மாணவ-மாணவிகளும் அச்சத்துடனே வருகின்றனர்.
வானங்களை ஓட்டிவருபவர்களும் இப்பகுதியில் வெளிச்சம் இல்லாததால் எதிரே வரும் வாகனத்தால் பயணம் மேற்கொள்வதில் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன்கருதியும், வாகன ஓட்டிகளின் நலன்கருதியும், பள்ளி மாணவ மாணவிகளின் நலன்கருதியும் பள்ளியின் அருகில் இருக்கும் மின்கம்பத்தில் மின்விளக்கு பொருத்திட வேண்டுமென பொதுநலன்கருதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கையளிக்கிறோம்.எஸ்.நாராயணசாமி,மாவட்டத்துணைசெயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,கன்னியாகுமரி மாவட்டம்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.