கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள பெட்ரோல் டீசல் நிரப்பும் (எரிபொருள் நிரப்பும்) மையங்களில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வால்பாறை பகுதியைச் சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன.இந்த எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த வாகனங்களும் வால்பாறை நகரை சுற்றியுள்ள வாகன ஓட்டிகளும் வாடகை வாகன ஓட்டுநர்களும் வால்பாறையில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையங்களையே நம்பியுள்ளனர்.
ஆனால் வால்பாறையில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையங்களுக்கு வர வேண்டிய பெட்ரோல் டீசல் ஆகியவை மிகவும் குறைந்த அளவே வருவதாக புகார் எழுந்துள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பும் மையங்களில் கூட்டமாக குவிந்து கிடக்கின்றனர். இதனால் வாடகை வாகன ஓட்டுனர்கள் சரியான முறையில் வேலைக்குச் செல்ல முடியாமலும் மற்ற வாகன ஓட்டிகள் அனைவரும் அவரவர் வேலையை சரியான முறையில் கவனிக்க முடியாமலும் மிகவும் சிரமப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் வாடகைக்கு வாகனத்தை ஓட்டும் கார், லாரி,ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டும் ஓட்டுநர்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். வால்பாறை நகரை சுற்றிலும் உள்ள எஸ்டேடுகளில் வசிக்கும் அனைவரும் சரியான நேரத்திற்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் இரண்டு சக்கர வாகனத்தையே நம்பியுள்ளனர். இதுபோன்றற சூழ்நிலையில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாமல் காத்துக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எரிபொருள் நிரப்பும் மையங்களில் உள்ள நிர்வாகத்தினரிடம் கேட்ட பொழுது பெட்ரோல் டீசல் போன்றவை குறைந்த அளவுதான் எங்களுக்கு வருகின்றது என்றும் நாங்கள் பலமுறை இது பற்றி அதிகாரியிடம் கூறினாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று
கூறுகின்றனர்.
வால்பாறை நகரை விட்டால் அடுத்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழியார் பகுதியில் தான் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து வால்பாறை நகரில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று வால்பாறை பகுதி சேர்ந்த வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.