NALAIYA VARALARU
மீண்டும் புலியின் தாக்குதல்! – வேடிக்கை பார்க்கும் வனத்துறை?
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலமான மூணார் பகுதியில் மீண்டும் மீண்டும் புலிகளின் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதற்கு முன்பதாக பல மாதங்களுக்கு முன்னதாக புலியின் தாக்குதலில் பல பசு மாடுகள் வேட்டையாடப்பட்டன.இதை நம்பி இருக்கும் விவசாயிகள் இதற்கு நஷ்ட ஈடு கேட்டு போராட்டம் நடத்தினர் ஆனாலும் சில மாதங்களுக்கு புலிகளின் தாக்குதல் சற்று குறைந்த நிலையில் இதனை குறித்த கவனம் குறைவாகவே இருந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மீண்டுமாக நேற்று மூணார் பகுதியில் உள்ள குண்டலை எஸ்டேடில் புலியின் தாக்குதலால் மாடுகள் வேட்டையாடப்பட்டன காட்டிற்கு சென்ற பசுக்கள் வேட்டையாடப்படவில்லை மக்கள் குடியிருக்கும் பகுதியில் புலி வேட்டை நடைபெற்றது. அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கும் ஆபத்தாக உள்ளதாகவும் பலமுறை இதே போன்ற சம்பவங்கள் நடந்தும் கூட வனத்துறை அதிகாரிகள் ,அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து பார்வையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதற்கான நஷ்ட ஈடும் கொடுக்கவில்லை இதற்கான மற்ற முயற்சியும் மேற்கொள்ள உள்ள எனவும் பொதுமக்கள் அரசிடம் பலமுடன் முறையிட்டு நம்பிக்கை இழந்து விட்டதாகவும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே அரசு உடனடியாக இதற்கான தீர்வை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன் மூணார்.