கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிள் போத்தனூர் ராமசாமி வீதி வழியாக சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபர் லிப்ட் கேட்டார்.
இதனை பார்த்த வினோத்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 200 பணத்தை பறித்து சென்றார். இது குறித்து வினோத்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிப்ட் கேட்பது போல நடித்து பணத்தை பறித்து சென்ற கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த ஆறுபடையப்பன் (18) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.