கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகம் வால்பாறை தனியார் எஸ்டேட் உட்பிரியா நிர்வாகத்திற்கு உட்பட்ட சிறுகுன்ற எஸ்டேட் கல எண் 35 ல் தேயிலை பறிக்கும் தோட்டப்பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நண்பகல் 12 மணி அளவில் தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கீதா முனி குமாரி (கணவன் பெயர் மதன் ஆறான்) என்ற பெண்ணை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். சிறுத்தை தாக்கிய பெண், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுத்தையால் தாக்கப்பட்ட பெண்ணிற்கு வனத்துறையினர் நேரில் சென்று நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கினார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.