கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகள் படித்து வருகிறார்கள். பள்ளியில் படித்து வரும் குழந்தைகளுக்கு மதிய உணவு பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது.இன்று மதியம் பள்ளியில் குழந்தைகளுக்கு சாப்பாடு சாம்பார் முட்டை ஆகியவை மதிய உணவாக வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு சத்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சாப்பாடும் சத்து மாத்திரையும் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு குழந்தைகளுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தைகளை மருத்துவமனைக்கு தூக்கி சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குழந்தைகள் சாப்பிட்ட சாப்பாட்டினால் பிரச்சனையா அல்லது அவர்கள் சாப்பிட்ட சத்து மாத்திரையால் பிரச்சனையா சுகாதாரமற்ற குடிநீரால் பிரச்சனையா என்பது சரியாக தெரியவில்லை.
மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளின் திடீர் உடல்நல குறைவு வால்பாறை பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இது சம்பந்தமாக வால்பாறை பகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சி தோழர்களும் கண்டன குரல் எழுப்பி உள்ளனர்.வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை நாங்கள் முறையாக செலுத்தி உள்ளோம் எங்களுக்கு நல்ல தரமான சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவுகளை மிகுந்த கவனத்தோடு சுகாதாரமான முறையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.
One Response
Valparai ல எந்த school பா