கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் மனித வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.
வால்பாறை எஸ்டேட்டுகளில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் மீது யானை கரடி சிறுத்தை போன்ற வனவிலங்குகள் தாக்குவது வாடிக்கையாகி உள்ளது.நேற்று தேயிலை பறிக்கும் பணியில் சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வட மாநில பெண்ணை சிறுத்தை தாக்கியது.
அதே எஸ்டேட் பகுதியில் இன்று தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளியான அணில் என்பவரை சிறுத்தை தாக்கி படுகாயம் அடைந்தார் அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் அந்தப் பகுதியில் உள்ள எஸ்டேட் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர் இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.