கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனை உள்ளது.இந்த அரசு மருத்துவமனைக்கு வால்பாறை நகரை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்த அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை பிளாஸ்டிக் ட்ரம்களில் சேகரித்து மருத்துவமனைக்கு வெளியே வைத்துள்ளார்கள்.
இவ்வாறு வெளியே வைத்துள்ள இந்த மருத்துவக் கழிவுகள் அடங்கிய பிளாஸ்டிக் ட்ரம்களை துப்புரவு பணியாளர்கள் உரிய நேரத்தில் எடுத்து அப்புறப்படுத்தாததால் அந்தப் பகுதியில் சுற்றி திரியும் சிங்கவால் குரங்குகள் மருத்துவக் கழிவுகளை ரோட்டில் கொட்டி நாசப்படுத்தியுள்ளன.அந்த சாலைகளில் ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள் சிதறி கிடக்கின்றன.இந்த சாலையானது பள்ளிக்கூட மாணவ மாணவியர்கள் சென்றுவரும் பாதையாகும்.இதனால் மாணவ மாணவியருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே இது போன்று மருத்துவ கழிவுகள் அடங்கிய ட்ரம்களை உரிய நேரத்தில் எடுத்து அப்புறப்படுத்தி மருத்துவ கழிவுகளை சரியான முறையில் கையாண்டு சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.