கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் உள்ளன அதில் தேயிலை பறிக்கும் பணியிலும் அதை சார்ந்துள்ள பணிகளிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் மனித வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருகிறது.கடந்த வாரம் சிறுத்தை தாக்கி இரண்டு வட மாநில தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
அதேபோல் இன்றும் இஞ்சி பாறை லோயர் டிசைன் பகுதியைச் சார்ந்த தொழிலாளி ஒருவரை கரடி தாக்கியது இதில் அவர் கடுகாயம் அடைந்தார்.அருகில் உள்ளவர்கள் அவரை வீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபோன்று வன விலங்குகள் தொடர்ந்து தொழிலாளர்களை தாக்கி வருவது தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.எனவே இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.