கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட சங்கிலி ரோடு பகுதியில் ஜார்க்கண்ட் பகுதியிலிருந்து பிழைப்புக்காக வால்பாறை அருகில் உள்ள சங்கிலி ரோடு டீ ஆலை பகுதியில் ஐந்து வயது சிறுவனை சிறுத்தை தாக்கியது.
வட மாநிலத்தைச் சேர்ந்த பீப்பையா கீதா இவர்களுடைய மகன் ஆகாஷ் வயது 5 இவர் காலை ஒன்பது மணி அளவில் அப்பகுதியில் உள்ள கால்வாயில் சலவை செய்வதற்காக அவரும் அவருடைய மகனையும் கூட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது தந்தை துணி துவைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஆகாஷ் அப்பகுதியில் உள்ள தயாரிக்காட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தார். https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ அப்போது தேரை காட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று சிறுவனை பிடித்துள்ளது சிறுவன் அலறியதால் பீப்பையா கல்லை எடுத்து சிறுத்தையை தாக்கியதால் மகனை விட்டு சென்றது உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வனத்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆகாசை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
மேலும் எஸ்டேட் பகுதிகள் அடர்ந்த காடுகளாக உள்ள இடத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.