கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கோடையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வால்பாறைநகராட்சி பந்தடி மைதானம் செல்லும் நடைபாதையில் மண் கற்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது தற்பொழுது பெய்து வரும் கன மழையில் குவித்து வைக்கப்பட்டிருந்த கற்கள் மற்றும் மண் ஆகியவை மழைநீரில் அடித்து வரப்பட்டு கழிவுநீர் செல்லும் கால்வாயில் நிரம்பியதால் கால்வாயில் செல்லும் குடியிருப்பு கழிவு நீர் பந்தடி மைதானத்தில் நிரம்பி நாற்றம் வீசி வருவருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடைப்பு ஏற்பட்ட கால்வாயை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.