NALAIYA VARALARU
வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனு!!
கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் முகாம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட கலெக்டர்,வால்பாறை நகராட்சி ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக கோவை மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட மாதத்தில் வால்பாறையில் கோடை விழா நடைபெற வேண்டும் என்றும், வானங்களை நிறுத்துவதற்கு தகுதியான இடங்களை தேர்வு செய்து அதற்கு தக்க குறியீடுகளை இடவேண்டும் என்றும், மீண்டும் சாலைகளை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என்றும், சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வாடகையில் நிரந்தர இடம் அமைத்து தர வேண்டும் என்றும், இரண்டு ஆண்டுகளாக பூங்கா,படகு இல்லம் பணிகள் 90% முடிந்த நிலையில் அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும்,
நகரில் சாலை விரிவாக்கம் செய்ய புதிய சாலைகள் அமைக்கப்பட்டன ஆனால் அந்த சாலைகள் பழைய சாலையின் மீதே போடப்பட்டதால் சாலையின் உயரம் மிகவும் உயர்ந்து கடைகள், குடியிருப்புகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன எனவே இனிமேல் புதிய சாலைகள் அமைக்கப்பட்டால் பழைய சாலையை தோண்டி எடுத்துவிட்டு அதன் மீது புதிய சாலையை அமைக்கும் படியும், வால்பாறை பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றன எனவே அதை சரி செய்து தர வேண்டும் என்றும்,
வால்பாறை மார்க்கெட் பகுதியில் சுகாதார வளாகம் தெரு விளக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கப்படும் அதிகப்படியான நுழைவு கட்டணத்தை குறைத்து ஆங்காங்கே வசூல் செய்யாமல் ஒரே இடத்தில் வசூல் செய்ய வேண்டும் என்றும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றும், வால்பாறை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாவுக்காக காத்திருக்கும் பொது மக்களுக்கு பட்டாக்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.