கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று நுழைய முயன்றது அந்தப் பகுதி பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வரும் பகுதி என்பதாலும் பள்ளி முடிந்து குழந்தைகள் வீட்டுக்கு திரும்பும் நேரம் என்பதாலும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது .உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பை லாவகமாக பிடித்து எடுத்துச் சென்றனர் .இதன் பின்னரே மக்கள் நிம்மதி அடைந்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
One Response
ஐயா இது விசமற்ற சாரைப்பாம்பு இனி வரும் காலங்களில் இது போன்ற விசமற்ற பாம்புகளை விசப்பாம்பு என செய்தி வெளியிட வேண்டாம். இதன் பிரதான உணவு எலிகள் ஆகும். சில நேரங்களில் சிறிய பாம்புகளை உண்ணும் மனிதர்களுக்கு தீங்கிழைக்காத பாம்பு