இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள கேரளா ஸ்டோரி பட காட்சிகளை நீக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேச்சு..
கோவை: எந்த படமும் எந்த மதத்தையும் புண்படாத வண்ணம் சமீபத்தில் வெளியாகியுள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள கேரளா ஸ்டோரி பட காட்சிகளை நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ,சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கே ஆர் ஜெயராம் உள்ளிட்டோர் முன்னிலையில் அப்பகுதியை சேர்ந்த பலர் அதிமுகவில் இணைந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி;
“தேர்தல் நேரத்தில் கொடுத்த எந்த வாக்குறுதியும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை, சிறுபான்மை மக்கள் ஏமற்றப்படுகிறார்கள்,அதே போல் 50 வருடமாக சிறுபான்மை மக்கள் போராடிய கபர்ஸ்தான் (மைய வாடி)கடந்த அதிமுக ஆட்சியில் அமைத்து கொடுத்தோம்.
சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள கேரளா ஸ்டோரி படத்திற்கு இஸ்லாம், ஜமாத் அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.எந்த படமும் எந்த மதத்தையும் புண்படுத்த கூடாது.
கடந்த அதிமுக ஆட்சியில் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு
வெளியிடப்பட்டது.
அதே போல கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வரும் குறிப்பிட்ட பட காட்சிகளை தற்போது உள்ள அரசு நீக்கிவிட்டு வெளியிட வேண்டும்.” என தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.