கோவை:
சிறுவயதிலேயே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு உடலிலேயே இருந்து கொண்டு இன்சுலின் செலுத்தும் நவீன இன்சுலின் பம்ப் கருவியை இதயங்கள் அறக்கட்டளை மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
டைப் ஒன் எனும் முதல் வகை நீரழிவு நோய் காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீரகம் பாதிப்பு செயலிழப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கருதி இதயங்கள் அறக்கட்டளையினர் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எட்டு மாதம் முதல் 18 வயது வரையிலான முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்வர்களுக்கு இலவச இன்சுலின் மற்றும் மருந்து வகைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சிறு வயதிலேயே இது போன்ற பாதிப்புகளால் குழந்தைகளுக்கு சிறுநீரகம் பாதிப்பு செயலிழப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கருதி நவீன வகை இன்சுலின் பம்ப் எனும் கருவியை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். சுமார் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட கருவியை சாதாரண ஏழை மக்கள் பயன் பெறும் விதமாக இது வரையிலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 250 பேருக்கு வழங்கியுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இண்போசிஸ் பவுண்டேஷன் சென்னை ஸ்நேகம் குழு மற்றும் இதயங்கள் அறக்கட்டளை,இணைந்து, சுமார் நாற்பது இலட்சம் மதிப்பிலான 25 இன்சுலின் பம்ப் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல் வகை நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட 25 குழந்தைகளுக்கு இன்சுலின் பம்ப் உபகரணம் இலவசமாக வழங்கப்பட்டது.
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய இதயங்கள் அறக்கட்டளை நிறுவன தலைவரும் மருத்துவருமான கிருஷ்ணன்சாமிநாதன், இந்நோயால் நாடு முழுவதும் சுமார் இருபதாயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழந்தைகளின் வாழ்க்கை நலனை கருத்தில் கொண்டே இந்த உபகரணம் இலவசமாக வழங்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் ஊசிக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம் என கூறிய அவர், சிறிய டிஜிட்டல் கருவியான இது பகல் மற்றும் இரவு நேரங்களில் வழக்கமான அளவில் இன்சுலின் அளவை தேவைக்கேற்ப உடலுக்கு வழங்க செய்யும். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
அதிக விலை கொண்ட இந்த கருவியை சாதாரண ஏழை மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த கருவியை இலவசமாக வழங்கி வருவதாக நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.
-சீனி, போத்தனூர்.