தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் சிவன் கோவில் அருகே ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் மீன்வளம் மீனவர் நலன் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா R.ராதா கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர்,
ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமை வகித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா பேசியது:
ஒட்டப்பிடாரம் எப்பொழுதும் திமுகவின் கோட்டை இங்கே சட்ட மன்ற உறுப்பினர், சேர்மன் , ஊராட்சி மன்ற தலைவர் அனைத்தும் திமுக தான், மூன்று தலைமுறையாக கட்சியில் இருந்த எனக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கிய அண்ணாச்சிக்கு நன்றி.
ஒட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் L.ரமேஷ் அவர்கள் பேசியது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சி இந்தியாவிற்கு முன்னோடியாக உள்ளன. மக்களை தேடி மருத்துவம் திட்டம் , அரசு பள்ளி மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவி தொகை , இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48 திட்டம் என பல்வேறு சாதனைகள் செய்து வருகிறார்.
அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் அவர்கள் பேசியது:
ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7-ஆம் நாள் முதல் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. அனைத்து அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடி நலப் பள்ளிகள், சீர்மரபினர் பள்ளிகள் ஆகியவற்றை மேம்படுத்த ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ அதிமுக பாஜக கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த கூட்டத்தில் மாநில வர்த்தகர்அணி இணைச்செயலாளர் S.R.S உமரிசங்கர் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் L. ரமேஷ் அவர்கள் , ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் , மகளிர் அணி என 800க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.