ஒட்டப்பிடாரம் சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள சிவன் கோவில், அருள் தரும் அகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு ஸ்ரீவிஸ்வநாதசுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
சித்திரை திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்புப் பூஜைகள், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று (மே 3ஆம் தேதி) காலை கோலாகலமாக நடந்தது.
முன்னதாக காலை 9 மணிக்கு அருள் தரும் அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீவிஸ்வநாத சுவாமி மற்றும் விநாயகர் – முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பின்பு சிறிய தேரில் விநாயகரும் முருகப்பெருமானும், பெரிய தேரில் அருள் தரும் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீவிஸ்வநாத சுவாமி எளுந்தருளினர். தொடர்ந்து காலை 10 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.
திருவிழா பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா வழங்கினார். தேரடி வீதியில் இருந்து புறப்பட்ட தேருக்கு முன்பாக ராஜமேளம், செண்டை மேளம், தப்பாட்டம், மகளிர் கோலாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் தேரோட்டம் நடந்தது. தேர் தெற்கு ரக வீதி வ.உ.சி சிலை , மேற்கு ரதவீதி அம்பாள் வீதி வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்தது.
தேரடி வீதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா மற்றும் சிவபெருமாள் ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் ஒ.த . சிவாகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில், ஒட்டப்பிடாரம் சரக ஆய்வளார் திருமதி. ப.முப்பிடாதி என்ற திவ்யா மற்றும் திருக்கோயில் பணியாளர் சண்முகராஜ், ஆறுமுகவள்ளி , திருக்கோயில் அர்ச்சகர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேர் திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநலத்துறை தேரோட்ட பவனிவிழா குழுவினர் மற்றும் திருக்கோவில் தக்கார் தமிழ்ச்செல்வி , சிறப்பாக செய்திருந்தனர். திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒட்டப்பிடாரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.