தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே அமைந்துள்ள ஓசனூத்து கிராமத்தில் கோவில் திருவிழா முன்னிட்டு நேற்று மாலை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து ஸ்ரீ கருப்பசாமி , ஸ்ரீ மொட்டையசாமி, ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் கொடை விழாவினை முன்னிட்டு நேற்று பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது இதில் மொத்தம் 32 ஜோடி களைகள் கலந்து கொண்டன இரு பிரிவாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளை ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தொடங்கி வைத்தார். இதில் முதலிடமும் பரிசு ரூபாய் 15001 ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் வழங்கினார்.
இரண்டாவது பரிசு ரூபாய் 13000 முருகன் கூட்டுறவு சங்க செயலாளர் அவர்கள் வழங்கினார் . மூன்றாம் பரிசு ரூபாய் 11000 செல்வக்குமார் வழங்கினார். நான்காம் பரிசு ரூபாய் 4000 கிருஷ்ணவேணி ஊராட்சி மன்ற தலைவர் மேலபாண்டியாபுரம் அவர்கள் வழங்கினார்.
இரு பிரிவுகளில் மொத்தம் 8 ஜோடி களைகள் வெற்றி பெற்றது பரிசுத்தொகை பிரித்து வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.